காணாமல் போன கல்லூரி மாணவி, கால்வாயில் சடலமாக மீட்பு; கொலை செய்யப்பட்டாரா..? போலீசார் விசாரணை..!
Missing college student found dead in canal in Kodagal village
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் கோடகல் கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பாவின் மகள் 17 வயதுடைய சவுஜன்யா. இவர், கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்துள்ளார். கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சவுஜன்யா அதன் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் கிராமம் முழுவதும் தேடியும், விசாரித்தும் பார்த்துள்ளனர். ஆனால் சவுஜன்யாவை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை காணவில்லை என கடந்த 24-ந் தேதி கோடகல் போலீசில் தந்தை சரணப்பா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுஜன்யாவை தேடி வந்துள்ளனர்.
இந்த சூழலில் சகாபுராவில் உள்ள கிருஷ்ணா ஆற்று கால்வாயில் பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது கண்டுக்கப்பட்ட சடலம் காணாமல் போன சவுஜன்யா தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
பிணமாக கிடந்த மகளின் உடலை பார்த்து சரணப்பா, அவரது மனைவி கதறி அழுத்தத்தோடு, ராகேஷ், பாண்டா, சிரு ஆகிய 03 பேரும் கடத்தி கொலை செய்திருப்பதாக சரணப்பா திடுக்கிடும் தங்களை போலீசாரிடம் கூறியுள்ளார்.
அத்துடன், கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கோடகல் போலீஸ் இன்ஸ்பெக்டருடன், மாணவியின் உறவினர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது ஜீப்பை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்டாரா..? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கோடகல் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Missing college student found dead in canal in Kodagal village