2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 07-இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!
Tamil Nadu Chief Electoral Officer announces that the final voter list will be published on February 7th 2026
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 07-ஆ தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2026-ஆம் ஆண்டு ஜனவரி 01ந் தேதி தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தினை, இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் அட்டவணையின்படி அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் 03-ஆம் தேதி வரை முன்னேற்பாடுகள், பயிற்சி, அச்சடித்தல், நவம்பர் 04-ஆம் தேதி முதல் டிசம்பர் 04-ஆம் தேதி வரை கணக்கீட்டிற்கான காலம், டிசம்பர் 04-ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலையங்களை மறுசீரமைத்தல், திருத்தியமைத்தல், டிசம்பர் 05-ஆம் தேதி முதல் 08-ஆம் தேதி வரை கட்டுப்பாட்டு அட்டவணையை மேம்படுத்துதல் மற்றும் வரைவுப் பட்டியலைத் தயாரித்தல், டிசம்பர் 09-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் ஆகும்.

டிசம்பர் 09-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 08-ஆம் தேதி வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம், டிசம்பர் 09-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை அறிவிப்பு கட்டம் (வழங்கல், விசாரணை மற்றும் சரிபார்ப்பு) கணக்கீட்டுப் படிவங்கள் மீதான முடிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு காணுதல் ஆகியவை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, இவை அனைத்தும் வாக்காளர் பதிவு அலுவலரால் முடிக்கப்பட வேண்டிய நாள் ஆகும்.
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியலின் தர அளவுகளை சரிபார்த்தல் மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுதல் வேண்டும். 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 07-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் ஆகும்.' என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu Chief Electoral Officer announces that the final voter list will be published on February 7th 2026