‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிக்கே வில்லனாக மிதுன் சக்கரவர்த்தி – அப்போ காத்திருக்குது செம்ம சம்பவம்! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்காக இன்னொரு அதிரடி காத்திருக்கிறது!
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தலைவருக்கு எதிரியாக நடிக்க உள்ள வில்லன் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அண்மையில் வெளியான ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் திரைக்கு வந்தது. ஆனால், வன்முறை காட்சிகள் மற்றும் சிக்கலான திரைக்கதை காரணமாக படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ரூ.500 கோடி வசூல் சாதனையை கடந்தாலும், ரசிகர்கள் மனதில் முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

இப்போது, அந்த தோல்வியின் தாக்கத்தைக் குறைத்து, மீண்டும் வெற்றிக் கோட்டை அடைய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முதல் பாகம் 2023ஆம் ஆண்டு வெளியானபோது, அது உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து ரஜினியின் கம்பேக் ஹிட்டாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு ஆகியோர் மீண்டும் நடிக்கின்றனர்.

மேலும், கேமியோ ரோலில் தோன்றிய மோகன் லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் மீண்டும் பங்குபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதோடு, இந்த முறை புதிய சேர்க்கையாக எஸ்.ஜே. சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை வித்யா பாலன் இணைந்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா முக்கிய வில்லனாக இருப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதிரடியாக ஒரு புதிய தகவல் வந்துள்ளது — ரஜினியின் முக்கிய எதிரியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் மிதுன் சக்கரவர்த்தி நடிக்க உள்ளாராம்!

சுமார் 300க்கும் மேற்பட்ட ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்த மிதுன் சக்கரவர்த்தி, தமிழில் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சனின் அதிரடி திரைக்கதையுடன், ரஜினி மற்றும் மிதுனின் மோதல் திரையில் எப்படிப் புயலை கிளப்பும் என்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
‘ஜெயிலர் 2’ – தலைவரின் அடுத்த அதிரடி வெடிப்பு என்பதில் சந்தேகமே இல்லை!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mithun Chakraborty as Rajinikanth villain in Jailer 2 then a great event awaits


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->