எம்ஜிஆர்-யை நான் அப்படி சொல்லவே இல்லை.. பல்டி அடித்த திருமாவளவன்!
thirumavalavan DMK ADMK MGR
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர். பொதுமக்களால் தெய்வமாக மதிக்கப்படும் தலைவர் என்பதால், அவரை குறிக்கும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், இவ்வாறு வெறுப்பு கலந்த கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போவார் எனவும் அவர் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திருமாவளவன், தாம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரையும் பெரிதும் மதிப்பதாகவும், பல முறை பொதுவெளியில் பாராட்டியதாகவும் விளக்கம் அளித்தார்.
தாம் கூறிய உரை, கலைஞர் நினைவு நிகழ்வில் நடந்தது என்றும், அப்போது தமிழ்நாடு அரசியல் கலைஞரை மையப்படுத்தி எவ்வாறு எதிர்ப்பு அரசியலாக மாறியது என்பதை விளக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதாவை ஒரே சாதிக்குள் சுருக்கக் கூடாது என்ற நோக்கில் தான் கருத்து தெரிவித்ததாகவும், தாம் எம்ஜிஆரை ஒரு சாதியுடன் இணைத்து பேசவில்லை என்றும் அவர் புது விளக்கமளித்துள்ளார்.
மேலும் தனது உரையின் சில பகுதிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் சர்ச்சை எழுந்ததாகவும் திருமாவளவன் கூறினார்.
English Summary
thirumavalavan DMK ADMK MGR