திமுகவின் அடிமைகளுக்கும், கோழைகளுக்கும் அரசியல் வரலாறு தெரியாததில் வியப்பில்லை - திருமாவளவனுக்கு பாஜக பதிலடி!
BJP Narayanan thirupathy condemn to VCK Thirumavalavan ADMK MGR
“ஒரு பார்ப்பனப் பெண்மணியே திராவிட கட்சிக்கு தலைவராக பாதை வகுத்து தந்தவர் எம்.ஜி.ஆர்” என விசிக திருமாவளவன் பேசியதற்கு அதிமுகவிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றனர்.
குறிப்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர் குறித்து விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று கடும் பதிலடியை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள கணடன செய்தியில், "அந்த பார்ப்பன பெண்மணி உயிருடன் இருந்தபோது இப்படி பேசுவதற்கு தைரியமில்லாத திருமாவளவன்,
சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்தவர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் திருமாவளவன், இப்போது பேசுவது வேடிக்கை.
அதே பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்த ராஜாஜி அவர்கள் ஆத்ரவில்லையென்றால், திமுக என்றோ அஸ்தமனம் ஆகியிருந்திருக்கும் என்ற வரலாறு தெரியாது பேசுவது அதை விட வேடிக்கை.
திமுக வின் அடிமைகளுக்கு, கோழைகளுக்கு அரசியல் வரலாறு தெரியாததில் வியப்பில்லை" என்று நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
BJP Narayanan thirupathy condemn to VCK Thirumavalavan ADMK MGR