பரபரப்பு... ஆன்லைன் கேம் விளையாட பணம் கேட்ட சிறுவன் குத்திக் கொலை.!!
boy murder for ask money play online game in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே சோலதேவனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகபிரசாத். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடன் பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்த சகோதரியின் மகன் தங்கி இருந்தார்.
இந்தச் சிறுவன் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். மேலும், இந்த ஆன்லைன் கேம் விளையாட தனது மாமா நாகபிரசாத்திடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த நாகபிரசாத் கடந்த 5ம் தேதி அதிகாலை சிறுவன் உறங்கிக்கொண்டிருந்தபோது, கத்தியைக் கொண்டு சிறுவனை குத்திக்கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தாபித்துச் சென்று தலைமறைவானார்
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு அளித்த தகவலின் படி விரைந்து சென்று, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான நாகபிரசாத்தை தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே குற்றவாளி நாகப்பிரசாத் போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boy murder for ask money play online game in karnataga