பள்ளிக் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி.!!
pm modi celebrate raksha pandhan function with school students
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகை தான் ரக்ஷா பந்தன். இந்த பண்டிகை நாளில் பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் கையில் மஞ்சள் நூல் கட்டுவது முக்கிய நிகழ்ச்சி.

அந்த வகையில், இந்த வருடம் இன்றைய தினம் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை யொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
நாடு முழுவதும் இந்தப் பண்டிகை கொண்டாட பட்டு வந்த நிலையில், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார். குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.
English Summary
pm modi celebrate raksha pandhan function with school students