சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி..! இனிமேல் புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்.. கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்..!
CBSE approves writing exams by looking at books
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் சிபிஎஸ்இ பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 09-ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, 2026-27 கல்வியாண்டு முதல் 09-ஆம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய நடைமுறையின் கீழ் ஒவ்வொரு பருவத்திலும் முக்கிய பாடங்களான மொழிப்பாடம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இத்திட்டம், திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் அதனை ஊக்குவிப்பது மற்றும் மனப்பாடம் செய்வதை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
CBSE approves writing exams by looking at books