'டெல்லியில் பீஹாரிகளை கேலி செய்வதோடு, பீஹாரிகள் தாக்கப்படும் போது ராகுல் காந்தி அலட்சியம் காட்டுகிறார்': பிரசாந்த் கிஷோர் குற்றசாட்டு..!
Prashant Kishor accuses Rahul Gandhi of mocking Biharis in Delhi and showing indifference when Biharis are attacked
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, டில்லியில் பீஹார் மக்களை கேலி செய்வதோடு, பல்வேறு மாநிலங்களில் பீஹாரிகள் தாக்கப்படும் போது ராகுல் அலட்சியம் காட்டுவாத தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பீஹாரின் நாளந்தாவில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்று கலந்து கொண்ட பொது அவர் மேலும் பேசியதாவது:
நிதிஷ் குமார் செய்த நல்ல பணிகளால், மக்கள் மற்றும் நாளந்தா மாவட்ட மக்கள், அவரை 20 ஆண்டுகளாக முதல்வராக ஆக்கினார்கள். ஆனால் இன்று, நிதிஷ் குமாரின் உடல் மற்றும் மனநிலை சரி இல்லை, அவருக்கு வயதாகி விட்டது.அவர் முதல்வராக நீடிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் மக்கள் நிதிஷ் குமாரை தாண்டி, வேறு யாரையாவது யோசித்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் அங்கு மேலும் பேசுகையில், நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள் மேம்படுத்தப்பட்டதோடு, மின்சாரம் வழங்கப்பட்டது, ஆனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பீஹாரில் இருந்து மக்கள் வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து செல்வது நிற்கவில்லை என்றும், மற்ற மாவட்டங்களை விட நாளந்தா நிச்சயமாக வளர்ச்சியடைந்துள்ளது, ஆனால் இங்குள்ள மக்களின் வறுமை ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுவரை, இங்குள்ள மக்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும், தேஜஸ்வி யாதவ் பேசுவதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை, தேர்தல் கமிஷன் மக்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பீஹார் மக்கள் வேலைவாய்ப்பை விரும்புகிறதாகவும், வெற்றுப் பேச்சுகளை அல்ல என்று முடிவு செய்துள்ளதால், அவர்கள் யாரும் இனி பொய்யான வாக்குறுதிகளை நம்ப போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் பட்டியலில் பெயர்கள் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையகத்தை எதிர்த்துப் போராடுவார்கள், தேர்தல் ஆணையகம் ஒன்றும் எஜமானர் அல்ல; மக்களே எஜமானர்கள் என்று கூறியுள்ளார். அத்துடன், மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி டில்லியில் பீஹார் மக்களை கேலி செய்வதோடு, பல்வேறு மாநிலங்களில் பீஹாரிகள் தாக்கப்படும் போது அலட்சியம் காட்டுகிறார் என்று பிரசாந்த் கிஷோர் குற்றம் சுமத்தியுள்ளார்.
English Summary
Prashant Kishor accuses Rahul Gandhi of mocking Biharis in Delhi and showing indifference when Biharis are attacked