'ஆபரேஷன் சிந்தூர்'ஒருவித சதுரங்க ஆட்டம், இதில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் மக்களை நம்பவைக்கிறது: ஜெனரல் உபேந்திர திவிவேதி விளக்கம்..! - Seithipunal
Seithipunal


ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றதாக அந்நாட்டு மக்களிடம் பிரசாரம் செய்து வருவதாகவும், இந்திய ராணுவ நடவடிக்கை குறித்த முக்கிய தகவல்களையும் ராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய ராணுவப் படைகள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தன.

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 09 தீவிரவாத முகாம்களை குறிவைத்து மே 07-ஆம் தேதி அதிகாலையில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

அடுத்ததாக 26 சுற்றுலா பயணிகளை கொன்ற மூன்று தீவிரவாதிகளும் கடந்த மாதம் 'ஆபரேஷன் மகாதேவ்' மூலம் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில், சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி உரையாற்றினார். அப்போது, 'ஆபரேஷன் சிந்தூர்'தாக்குதலுக்குப் பிறகு, தாங்கள்தான் வென்றதாக பாகிஸ்தான் அந்நாட்டு மக்களை அவர்கள் எப்படி நம்ப வைத்து வருகின்றனர் என்பதை விளக்கியுள்ளார். 

அதாவது, வெற்றி என்பது நமது மனதில் தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும். பாகிஸ்தானியரிடம் நீங்கள் தோற்றீர்களா அல்லது வென்றீர்களா? என்று கேட்டால், அவர்கள் 'எங்கள் நாட்டு தளபதி ஃபீல்டு மார்ஷலாகிவிட்டார், நாங்கள் நிச்சயம் வென்றிருப்போம், அதனால்தான் அவர் உயர் பதவிக்கு உயர்ந்திருக்கிறார்' என்று சொல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படித்தான் அவர்கள் (பாக்கிஸ்தான் ) நாட்டு மக்கள், எதிரி நாட்டு மக்கள் மற்றும் நடுநிலை மக்களைக் கவர்கிறார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேசன் சிந்தூர் மூலம், இந்தியப் படைகள் தங்களது பாணியில் நீதியை நிலைநாட்டியுள்ளதாகவும், இந்திய ராணுவத்தின் இந்த செய்தி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆபரேசன் சிந்தூர் சின்னத்தை ஒரு லெப்டினன்ட் கர்னலும், ஒரு வீரரும் உருவாக்கியதாகவும், பதிலடி தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராகும் போதே, இந்த செய்திப் பரிமாற்ற உத்திகளுக்கும் நாங்கள் தயாரானோம் என்றும் அறிவித்துள்ளார்.

முக்கியமாக தாக்குதல் நடந்த மறுநாளே முப்படைத் தளபதிகளையும் அழைத்து, 'நடந்தது போதும்' என்று கூறி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும் முழு சுதந்திரத்தையும் படைகளுக்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்ததாக 'ஆபரேஷன் சிந்துார்' ஒருவித சதுரங்க ஆட்டத்தைப் போன்றது. எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியாத சூழலில் நாங்கள் சதுரங்க ஆட்டத்தை ஆடினோம் என்றும் கூறியுள்ளார். 

இதனை 'சாம்பல் நிற மண்டலம்' என்று அழைக்கப்படுவதக்கவும்,  இந்த நடவடிக்கை வழக்கமான போர் நடவடிக்கை அல்ல, ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாதது என்று தெரிவித்துள்ளார். நாங்கள் (இந்திய படை) காய்களை நகர்த்தினோம், எதிரியும் (பாகிஸ்தான்) நகர்த்தினார்கள் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், சில இடங்களில் அவர்களுக்கு நாங்கள் ‘செக்மேட்’ வைத்தோம் என்றும், சில இடங்களில் எங்களது வீரர்களை இழக்கும் அபாயத்தையும் மீறி வெற்றியை நோக்கிச் சென்றோம் என்றும், ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து ராணுவ தளபதி விளக்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

General Upendra Dwivedi explains that Pakistan is convincing people that Operation Sindh was a success


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->