நாய்கடித்தால் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை...!
Dos and Donts Dog Bite
நாய்கடித்தால் செய்யக்கூடாதவை:
காயத்துக்கு கட்டுப் போடக்கூடாது.
சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருக்க வேண்டும்.
திறந்த காயமாக இருந்தாலும், ஆழமான காயமாக இருந்தாலும் தையல் போட்டு மூடக்கூடாது.
நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக்கூடாது. அப்படித் தடவினால் கிருமிகள் உடலை விட்டு வெளியேறாமல் தங்கி விடும்.

நாய்கடித்தால் செய்யவேண்டியவை:
நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.
வேகமாக விழுகிற குழாய்த் தண்ணீரில் காயத்தைக் கழுவுவது மிக முக்கியமானது.
காயம் ஆழமாக இருந்தால் காயத்தை நன்கு விலக்கிச் சுத்தப்படுத்த வேண்டும்.
தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
உணவு முறைகள்
தவிர்க்கவேண்டிய உணவுகள் :
இறைச்சி
கத்திரிக்காய்
பூசணிக்காய்
புளிப்பு பொருட்கள்