உப்புக்கு பெயர் பெற்ற இடத்தில கப்பல் கட்டுவதா? தமிழக வெற்றி கழகம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


உலக அளவில் உப்புக்கு பெயர் பெற்ற தூத்துக்குடி தற்போது உப்புத்தொழில் அழிந்து போகும் வகையில் கப்பல் கட்டும்தளம் என்ற பெயரில் நிலம் கையகப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது என தமிழக வெற்றி கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழக  நிர்வாகி ஆனந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடியில் முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை உள்ள உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் என்பெயரில் நிலத்தை அபகரிக்க அரசு தற்போது முயற்சி செய்து வருகிறது. 

இதில் மிகவும் நடுத்தர மற்றும் ஏழை தாழ்த்தப்பட்ட பொதுமக்களுக்கு அரசு வழங்கிய குறைந்த அளவு இடம் வைத்துள்ள ஏழை மக்களின் இடமும் இதில் சேர்ந்து பறிபோகிறது.அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும் சூழ்நிலை உள்ளது. உப்பளத்தை அளிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

உலக அளவில் உப்புக்கு பெயர் பெற்ற தூத்துக்குடி தற்போது உப்புத்தொழில் அழிந்து போகும் வகையில் கப்பல் கட்டும்தளம் என்ற பெயரில் நிலம் கையகப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் பின்புலத்தில் முதல்-அமைச்சரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இதில் சம்பந்தபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருக்கு வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது. நிலத்தை கையகப்படுத்துவதை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழக வெற்றி கழக நிறுவன தலைவரும் நடிகருமான விஜய் உத்தரவின் பேரில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it appropriate to build a ship in a place known for salt? Condemnation by the Tamil Nadu Victory Association


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->