இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் 02-வது விற்பனை நிலையம் நாளை டெல்லியில் திறப்பு..! - Seithipunal
Seithipunal


உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் மின்சார கார்களை உற்பத்தி செய்து, விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

டெஸ்லா நிறுவனம் உலகம் முழுவது தனது விற்பனை நிலையங்களை அமைத்துள்ள நிலையில், இந்தியாவில் மும்பையில் தனது நிறுவனத்தை தொடங்கியது. தற்போது மும்பையை தொடர்ந்து,   தலைநகர் டில்லியில் டெஸ்லா தமது புதிய விற்பனை நிலையத்தை நாளை (ஆகஸ்ட் 11) தொடங்கவுள்ளது.

இந்தியாவில் மும்பையின் பாந்தரா பகுதியில் டெஸ்லா நிறுவனம் முதல் கார் நிறுவனத்தை தோணுகியுள்ள நிலையில், அதன் 02-வது விற்பனை நிலையம் டில்லியில் நாளை (ஆகஸ்ட் 11) திறக்கப்படுகிறது. இதற்காக அங்குள்ள ஏரோசிட்டியில் கிட்டத்தட்ட 8,200 சதுர அடி இடத்தை மாதம்தோறும் ரு.17.50 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teslas 2nd dealership in India to open in Delhi tomorrow


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->