Coolie படத்தின் டிக்கெட் விலை கண்டு அதிர்ச்சியாகும் ரசிகர்கள்...!
Fans shocked by ticket price movie Coolie
வருகிற 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ''கூலி'' படம். இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா உட்பட உலகம் முழுவதும் தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் முந்தியடித்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.மேலும், முன்பதிவு தொடங்கிய தொடங்கிய நாள் முதல் அனைத்து மாநிலங்களிலும், ஜெட் வேகத்தில் விற்பனையாகிறது.
இதனிடையே,'கூலி' டிக்கெட் ரூ. 2,000 விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி, பெங்களூருவிலுள்ள ஒரு திரையரங்கில், ஆன்லைன் முன்பதிவிலேயே ரூ. 2,000க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் சில இடைத்தரகர்கள் ரூ. 5,000 வரை டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.இது தற்போது ரசிகர்களுக்கு சற்று வருந்ததக்க விதமாக மாறியுள்ளது.
English Summary
Fans shocked by ticket price movie Coolie