தலையில் ஈட்டி பாய்ந்து 9 ஆம் வகுப்பு மாணவன் மூளைச்சாவு.!!
school student brain death in theni
தேனி மாவட்டத்தில் உள்ள, உத்தமபாளையம் அருகே கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது குடும்பத்துடன் கேரளாவில் தங்கி இருந்து ஏலத்தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சாய்பிரசாத். இவர் ராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், சாய்பிரசாத் சக நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். இந்த மைதானத்திற்கு கூடலூரைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் தபேஷ் ஈட்டி எறிதல் பயிற்சிக்காக வந்தார்.

அப்போது தபேஷ் எறிந்த ஈட்டி எதிர்பாராத விதமாக அதே மைதானத்தில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த சாய்பிரசாத் தலையில் பாய்ந்தது. இதைப்பார்த்து அங்கிருந்த ஆசிரியர்கள், சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து சாய்பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து சாய் பிரசாத் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சாய் பிரசாத் சிகிச்சை பலனின்றி இன்று மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student brain death in theni