இந்தியாவின் மின்னணு உற்பத்தி ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிப்பு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவிற்கு ஸ்மார்ட் போன்களை வழங்கும் முன்னணி நாடாக இந்தியா மாறியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்டங்களின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் முன்னணி நாடாக இந்தியா மாறியுள்ளது என்றும், மின்னணு உற்பத்தி இப்போது ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் மின்னணு உற்பத்தி ஆறு மடங்கு வளர்ந்துள்ளது என்றும், மின்னணு ஏற்றுமதி 08 மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக மாறியுள்ளது. இந்த வளர்ச்சி, தொழில்நுட்ப உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாறுதல், மேம்பட்ட மின்னணு சாதனங்களை இன்னும் பரவலாகக் கிடைக்கச் செய்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்று யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியாவின் செமிகண்டக்டர் தொழிற்துறையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நீண்டகால கனவு 60 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாகியுள்ளதாகவும், இன்று, நாட்டில் ஆறு செமிகண்டக்டர் ஆலைகள் கட்டுமானத்தில் உள்ளன என்று தெரிவித்துள்ளார். மிக விரைவில் இந்த தொழிற் சாலைகளில் இருந்து முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் வெளிவருவதைக் காண்போம் என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indias electronics production has increased to Rs 12 lakh crore says Ashwini Vaishnav


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->