சோகம்... ரெயில் மோதி பள்ளி மாணவன் பலி.!!
school student died for train accident in theni
தேனி - மதுரை செல்லும் சாலையில் ரெயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் அந்தப் பகுதியில் உள்ள பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கோகுல் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக கோகுல் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்த நிலையில் நேற்று கோகுல் கடைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக தேனியில் இருந்து மதுரை நோக்கி தண்டவாளத்தை ஆய்வு செய்வற்கான ரெயில் என்ஜின் சென்று கொண்டு இருந்தது.

இதைக் கவனிக்காமல் கோகுல் தண்டவாளத்தைக் கடந்தால் எதிர்பாராதவிதமாக அந்த ரெயில் என்ஜின், கோகுல் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student died for train accident in theni