தல தரிசனம்! திருப்பதியில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம்! - ஒரு வார்த்தையால் அனைவரையும் அமைதிப்படுத்திய தல!
Thala Darshan Fans cheered after seeing Ajith Tirupati Thala calmed everyone with one word
தமிழ் திரையுலகின் மாபெரும் நட்சத்திரம் அஜித்குமார், ரசிகர்களால் “தல” என போற்றப்படும் இவர், அண்மையில் வெளியான ‘Good Bad Ugly’ திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, தனது விருப்பமான துறை olan கார் ரேஸிங்-இல் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தல அஜித்குமார் தரிசனம் செய்தார். கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்றபோது, அவரை கண்ட ரசிகர்கள் உற்சாகமாக “தல! தல!” என கோஷமிட்டனர்.
அதற்கு அமைதியாக சைகை செய்த அஜித், “இது கோவில், அமைதியாக இருங்கள்” என்ற மரியாதையான நினைவூட்டல் செய்தார். அஜித்தின் இந்த செயல், அவரது ஒழுக்கம் மற்றும் மரியாதை உணர்வை வெளிப்படுத்துவதாக ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், கேரளா ஊட்டுகுளங்கர பகவதி அம்மன் கோவிலிலும் அஜித்குமார் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Thala Darshan Fans cheered after seeing Ajith Tirupati Thala calmed everyone with one word