டி20 உலகக் கோப்பை; இந்திய அணியின் பீல்டிங்; சூப்பர் 08-இல் படும் மோசமான Record..!
India has missed the most catches in the T20 World Cup
10 வது டி 20 உலக கோப்பை போட்டிகளில் சூப்பர் 08 சுற்றுகள் நேற்றுடன் முடிவந்தன. நேற்றைய போட்டியில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான அரையிறுதி தொகுதிக்கான போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பவர் பிளேக்கு பிறகு அதிரடியாக ஆடினர். ஆனால், இந்திய வீரர்கள் மோசமாக பீல்டிங் செய்தனர். அதிலும் குறிப்பாக அபிஷேக் சர்மா மிக முக்கியமான இரண்டு கேட்ச்களை தவறவிட்டார்.
அதிலும் சிறப்பாக ஆடிய ஷாய் ஹோப், மற்றும் ரோவ்மேன் பொவேல் ஆகியோரது கேட்சை பிடிக்க தவறினார். அத்துடன், திலக் வர்மா பவுண்டரி லைனில் கடினமான கேட்சை பிடிக்க தவறவிட்டார்.

இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை இந்திய அணியின் பீல்டிங் சிறப்பானதாக அமையவில்லை. சுமார் 13 கேட்ச்களை தவறவிட்டுள்ளது. அதிலும், சூப்பர் 08 சுற்றில் அதிக கேட்ச்களை தவறவிட்டது இந்திய அணி என்ற மோசமான சாதனையும் செய்துள்ளது.
கேட்ச் பிடிப்பதில் இந்திய அணியின் திறன் 72 சதம்வீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
India has missed the most catches in the T20 World Cup