"15 கோடி சம்பளம் என்கிறார்கள்… ராஷ்மிகாவை விட நான் கூடுதல் சம்பளம் கேட்கவில்ல!" – மமிதா பைஜு அதிரடி பதில்
They say 15 crore salary I wonot ask for more salary than Rashmika Mamita Baiju sharp response
பிரேமலு படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய திரையுலகில் வேகமாக உயர்ந்து வரும் நடிகை மமிதா பைஜு, தற்போது தமிழ் சினிமாவிலும் தன்னுடைய தடத்தை வலுவாக பதித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வந்துள்ள நிலையில், ரசிகர்களிடமிருந்து அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளது. 100 கோடி கிளப்பில் பிரேமலுவைத் தொடர்ந்து டியூட் படமும் இணைந்துள்ளதால், மமிதா பைஜுவின் மார்க்கெட் வேகம் இப்போது உச்சத்தில் இருக்கிறது.
இந்நிலையில், "மமிதா பைஜு பிரேமலு 2 படத்திற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்!" என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதை மனோரமா ஆன்லைனுக்கு அளித்த பேட்டியில் மமிதா நேரடியாக மறுத்துள்ளார்.
அவரது சொற்களில்,"நான் ₹15 கோடி சம்பளம் வாங்கினேன் என்ற செய்தியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த லிங்கை ஒருவரே எனக்கு அனுப்பினார். மக்கள் இதை உண்மையாக நம்பி, ‘அவளுக்கு இவ்வளவு பெரிய அளவு வந்துவிட்டதா?’ என்று எழுதினர். ஆனால் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மை இல்லை. என் சம்பளத்தை என் தயாரிப்பாளர்களுக்கு தான் தெரியும்" என்று தெளிவாக கூறியுள்ளார்.
மேலும், “நான் ராஷ்மிகா மந்தனாவை விட அதிக சம்பளம் கேட்பதில்லை. அவ்வாறு கூறப்படுவது முற்றிலும் தவறு” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மமிதா தனது திரைப்பயண அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.“சூப்பர் சரண்யா படத்தைப் பார்த்த பிறகுதான் இயக்குநர் கீர்த்திஸ்வரன் சார் டியூட் படத்திற்காக என்னை அழைத்தார். மலையாளியாக இருந்தாலும் தமிழ் கலாச்சார கதாபாத்திரத்தில் நம்பிக்கையுடன் நடித்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை. ஜி.வி.பிரகாஷுடன் ரெபல் படத்தில் சிறிய கதாபாத்திரம் தான், ஆனால் டியூட் படத்தில் முக்கியமான பாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதற்காக மிகுந்த பொறுப்புணர்வுடன் உழைத்தேன்” என்றார்.
அதேபோல், பிரதீப் ரங்கநாதனுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி கூறும்போது,“ஸ்கிரிப்ட் ரீடிங்கிலேயே நாங்கள் சந்தித்தோம். அவர் எப்போதும் சக கலைஞர்களை சுலபமாக உணர வைப்பார். அதனால் பதட்டமே இல்லை. தொடக்கம் முதலே நாங்கள் நட்பாக பழகியதால், படப்பிடிப்பு எளிதாகச் சென்றது” என மமிதா தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவத்தையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.“விஜய் சாருடன் நடித்தது கனவு நனவானது போல இருந்தது. படப்பிடிப்பின் முதல் நாளே அவர் என்னிடம் வந்து பேசினார். சூர்யா சார் எனக்குச் சொன்னார் – ‘இறுதியாக நாமும் ஒன்றாக நடிக்கிறோம்’ என்று. தனுஷ் சார் செட்-இல் மிகுந்த உதவியாளர்; அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்” என மமிதா கூறியுள்ளார்.
இப்போது, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ திரைப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார்.
15 கோடி வதந்தி மீதான அவரது பதில், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
They say 15 crore salary I wonot ask for more salary than Rashmika Mamita Baiju sharp response