அனைத்து வசதிகளுடன் எம்.பிக்களுக்கு டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு - பிரதமர் மோடி திறந்து வைப்பு.!!
new house build in delhi for mps
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்லும்போது அங்கு தங்குவதற்கு மத்திய அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்து கொடுப்பது வழக்கத்தில் உள்ளது.
இந்த நிலையில், கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக வரும் பாராளுமன்ற எம்.பி.க்களுக்காக டெல்லி பாபா கரன்சிங் மார்க் பகுதியில் பிரமாண்டமான அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

அதாவது 4 இடங்களில் தலா 25 மாடிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 184 எம்.பி.க்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த 184 எம்.பி.க்களில் தமிழக எம்.பி.க்கள் 20 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீடு கிடைக்க உள்ளது.
சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட ஒவ்வொரு வீட்டிலும் 5 படுக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டில் எம்.பி.க்கள் தங்களது அலுவலகத்தை அமைத்துக் கொள்ளவும் ஒரு பெரிய அறை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அடுத்த வாரம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
new house build in delhi for mps