நாடு முழுவதும் 334 அரசியல் கட்சிகளை பதிவு பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையம்!
Election Commission political partys
இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகளை பதிவு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடும் அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றாததால், இவை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கட்சிகளின் அலுவலகங்கள் எங்கும் இயங்காத நிலையிலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்தவை என்றும் ஆணையம் கூறியுள்ளது.
முன்பு, அங்கீகாரம் பெறாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 2,854 ஆக இருந்த நிலையில், 334 கட்சிகள் நீக்கப்பட்டதால் தற்போது அது 2,520 ஆக குறைந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
English Summary
Election Commission political partys