ஜார்கண்டில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து - பயணிகளின் கதி என்ன?
load train 20 box derailed in jarkhant
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள செரைகேலா - கர்ஸ்வான் மாவட்டம் சாண்டில் பகுதியில் இன்று அதிகாலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சரக்கு ரெயில் தடம் புரண்டதால், தென்கிழக்கு ரெயில்வேயின் சாண்டில் - டாடாநகர் பிரிவுக்கு இடையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. சில ரெயில்கள் குறுகிய காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
English Summary
load train 20 box derailed in jarkhant