உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யுங்கள் அல்லது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுங்கள்; பாஜக வலியுறுத்தல்!
Submit the resignation letter or resign from the MP position BJP insists
ராகுல் காந்தி ஆதாரங்களை உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் அதனை ராகுல் காந்தி எம்.பி. மறுத்துவிட்டார்.இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.
2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகசமீப காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார், ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார், இதற்காக தேர்தல் ஆணையமும் ராகுல் காந்திக்கு தக்க பதிலடி கொடுத்தது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனத்தை தெரிவித்தது,
மேலும் கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 250 வாக்குகள் முறைகேடு செய்யபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து தன்னிடம் உள்ள ஆதாரங்களை உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்யும்படி தெரிவித்துள்ளது. ஆனால், ஆதாரங்களை உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்ய ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடன் கூறுகையில்,
தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அதற்கான ஆதாரங்களை கொடுக்க மறுத்து உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யவும் மறுக்கிறார். தேர்தல் ஆணையத்தினை நம்பவில்லையென்றால் , சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துக்களை நம்பவில்லையென்றால் முதலில் உங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுங்கள். அதன் பின் சோனியா காந்தி, பிரியங்கா காந்தியும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Submit the resignation letter or resign from the MP position BJP insists