முதலமைச்சர் பழனிசாமிக்கு கொரோனா டெஸ்ட்! முடிவு வெளியானது!  - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும்,  பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி கொண்டிருப்பதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவர்கள், போலீசார்கள், துப்பரவு பணியாளர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் அனைவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படுவது, கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. 

இதனிடையே முதலமைச்சரின் அலுவலக ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று  இருப்பதை உறுதி செய்தனர்.  முதலமைச்சர் அலுவலகத்தில் தனி செயலாளராக இருந்த தாமோதரன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அடுத்ததாக முதலமைச்சர் பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யபட்டதாகவும் அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu cm EPS corona test report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal