பிரவீன் சக்ரவர்த்தியின் செயல்பாடுகள் கூட்டணியை உடைக்கும் முயற்சி – திமுக உறவை துண்டிக்க டெல்லி மேலிடம் ஆர்டர்? பின்னணி? - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவுத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தியின் சமீபத்திய செயல்பாடுகள், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமணி பேசியுள்ளார். “பிரவீன் காங்கிரசுக்கு வந்தே 7–8 வருடங்கள்தான் ஆகிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர்களின் பெயர் கூட அவருக்கு தெரியாது. அவர் ஒரு வெற்று வேட்டு. வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கூட்டணியை உடைக்கவே இப்படிப் பேசுகிறார்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சந்தித்து அரசியல் விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. இதற்கு முன்பே, விஜயை பாராட்டும் வகையில் அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்ததும் பெரும் விவாதத்தை கிளப்பியது. அந்த சந்திப்பில் கூட்டணி அரசியல், ஆளும் திமுக, தமிழகத்தின் அரசியல் நிலவரம் உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, பிரவீன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்தது திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மீது கோபத்தில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “இந்திய மாநிலங்களில் அதிக கடன் சுமை உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010ஆம் ஆண்டில் உத்தர பிரதேசம் தமிழகத்தை விட அதிக கடனில் இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தின் கடன் உ.பியை விட இரு மடங்கு அதிகம். வட்டி சுமையில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு திமுக கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த பின்னணியில் பேசிய ரமணி, “கட்சிக்குள் பேசுவது வேறு, கூட்டணியில் இருந்து கொண்டு பொதுவெளியில் எதிர்ப்பது வேறு. பிரவீன் ஏதாவது கோரிக்கையை வைத்து பேச வேண்டுமே தவிர, நேரடியாக எதிர்ப்பது தவறு. கூட்டணி தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல் அவர் செயல்படுகிறார்” என கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து அவர், “பிரவீன் இப்படி செயல்படுவதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, காங்கிரஸ் மேலிடம் சொல்லி கூட்டணியை முறிக்க முயற்சிப்பது. இரண்டாவது, திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் அதை உடைக்க விஜய் அல்லது பாஜக போன்ற சக்திகள் முயற்சிப்பது. மூன்றாவது, அவருக்கு மயிலாடுதுறை தொகுதி கிடைக்கவில்லை என்பதால் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக இப்படி பேசுவது” என்றும் குற்றம்சாட்டினார்.

மொத்தத்தில், பிரவீன் சக்ரவர்த்தியின் செயல்பாடுகள் காங்கிரஸ்–திமுக கூட்டணியில் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகவும், இந்த விவகாரம் தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Praveen Chakravarthy activities an attempt to break the alliance Delhi high command orders to sever ties with DMK Background


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->