பாஜக கனவில் மண்ணை அள்ளிப் போட்ட விஜய்.. தவெக பக்கம் நகரும் தினகரன்–ஓபிஎஸ்–பிரேமலதா? அதிமுக–பாஜக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் அதிமுக–பாஜக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த முயற்சிக்கு தடையாக டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆகியோர் கிட்டத்தட்ட வேறுபக்கம் தாவி விட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனுடன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுவதால், அதிமுக–பாஜக கூட்டணியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் தன் செல்வாக்கை ஆழமாக பதிய வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்காக அதிமுகவுடன் கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தி, திமுகவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால் கடந்த கால தேர்தல் அனுபவங்கள், இந்த கூட்டணி தனக்கேற்ற அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதையும் பாஜக உணர்ந்துள்ளது. அதனால் இந்த முறை விமர்சனங்களை முறியடிக்கும் வகையில், கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறி விட்டனர். இதே நேரத்தில், தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி பேரத்தை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் தவெக கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்பு அதிகம் என்றே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

இதற்கிடையே, தேமுதிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல் வெளியானதை அடுத்து, பிரேமலதா விஜயகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர் விஜயுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகர்வுகள் அனைத்தும் டெல்லி பாஜக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பியூஷ் கோயல் தலைமையிலான பாஜக குழுவினர் அதிமுக தலைமையை சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை” என்று தெளிவாக தெரிவித்தார். ஆனால் இதே நேரத்தில், தினகரன், பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்ஸுக்கு முறையே 6, 6 மற்றும் 3 தொகுதிகள் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்த தகவல், அந்த மூவரையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பேசிய டிடிவி தினகரன், அமமுகக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுவது வெறும் வதந்தி என்றும், யாரை தோற்கடிப்பதற்காக அமமுக உருவாக்கப்பட்டதோ அந்த வழியிலேயே தாங்கள் பயணம் தொடர்வோம் என்றும் தெரிவித்தார். அதேபோல், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில், வெறும் மூன்று தொகுதிகளுக்காக அதிமுக கூட்டணியில் சேர வேண்டாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டதாகவும், அதற்கு ஓபிஎஸ்ஸும் ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் சேரும் வாய்ப்பு குறைந்த நிலையில், தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸுக்கு அடுத்த தேர்வாக திமுக அல்லது தமிழக வெற்றிக் கழக கூட்டணிதான் இருக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, ஆரம்பத்திலிருந்தே விஜயின் தவெக குறித்து நேர்மறையாக பேசி வரும் தினகரன், தவெக தலைமையில் பெரிய கூட்டணி அமைந்தால் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் என்று முன்பே கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, தினகரன்–ஓபிஎஸ்–பிரேமலதா ஆகியோர் திமுக, அதிமுக மற்றும் தவெக என மூன்று அணிகளுக்கும் வாய்ப்பை திறந்தே வைத்துள்ளனர். இருப்பினும், மரியாதையான தொகுதி பங்கீடு கிடைத்தால், தவெக அணிக்கே அவர்கள் செல்லும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நகர்வுகள், 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay has shattered BJP dream Is Dinakaran OPS Premala moving towards Tvk A big shock for the AIADMK BJP alliance


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->