விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் எப்போ, எங்கே தெரியுமா? வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் கீத கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்ததிலிருந்தே காதல் செய்து வருவதாக நீண்ட காலமாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அந்த காதல் குறித்து இருவரும் இதுவரை எந்த உறுதிப்படுத்தலும், மறுப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் ரகசியமாக நிச்சயம் செய்துகொண்டதாகவும், தை மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் ஜோடியாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயமும் நடந்தது. ஆனால் அந்த உறவு திருமணத்தில் முடிவடையாமல் நின்றது. அதன்பின் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்த ராஷ்மிகா, தொடர்ந்து தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து இன்று பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார்.

இந்த ஆண்டு ராஷ்மிகா நடித்த சாவ்வா திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. தீபாவளிக்கு வெளியான தம்மா பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், தெலுங்கில் வெளியான தி கேர்ள் ஃபிரெண்ட் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. மறுபுறம், விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியடைந்தது.

நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, கடந்த அக்டோபர் மாதம் எளிமையான முறையில் நிச்சயம் செய்துகொண்ட விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி, வரும் பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள பழமையான பிரம்மாண்ட கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதன் பின்னர் ஹைதராபாத்தில் சினிமா பிரபல்களுக்காக தனி வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்தனை ஆண்டுகளாக மறைமுகமாக மட்டுமே பேசப்பட்ட இந்த காதல், இப்போது திருமணமாகும் கட்டத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுவதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தங்களது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When and where is Vijay Deverakonda Rashmika wedding Information released


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->