‘பருத்திவீரன்’ கிராமிய குரல்... இப்போ மௌனமானது...! - பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
rustic voice Paruthiveeran has now fallen silent Singer Lakshmi Ammal passed away
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த, கிராமிய இசையின் உயிரோட்டமாக விளங்கிய புகழ்பெற்ற பாடகி லட்சுமி அம்மாள் (75) இன்று காலை காலமானார்.
தென் மாவட்டங்களின் பட்டி தொட்டியெங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மண் மணம் மிக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊரோரம் புளியமரம்’, ‘டங்கா டுங்கா’ போன்ற பாடல்களுக்கு தனது தனித்துவமான குரலை வழங்கி, “பருத்திவீரன் லட்சுமி” என்ற பெயரில் பெரும் புகழை பெற்றார்.
அவரது பாடல் குரல், கிராமிய வாழ்க்கையின் துடிப்பையும் உணர்ச்சியையும் திரையில் உயிர்ப்பித்தது.மேலும், கலைக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பை பாராட்டி, தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் இறைவன் அடியொட்டி சென்றார்.
அவரது மறைவு தமிழ் திரையுலகிலும், நாட்டுப்புற இசை உலகிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
rustic voice Paruthiveeran has now fallen silent Singer Lakshmi Ammal passed away