ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் சங்கீதா, பிள்ளைகள் வராதது ஏன்? – அவசியம் இல்லை.. பிரபலம் ஓபன்
Why didnot Sangeetha and her children come to the Janyayan music launch event Not necessarily Popularity Open
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டனர். ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் சாஷா ஆகியோர் கலந்து கொள்ளாதது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியது.
விஜய் – சங்கீதா தம்பதியர் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். வெளிநாட்டிலிருந்து விஜய்யை பார்க்க வந்த சங்கீதாவை அவரது பெற்றோர் விரும்பியதன் அடிப்படையில் இந்த திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் உள்ளனர். ஜேசன் சஞ்சய் போக்கிரி, வேட்டைக்காரன் போன்ற படங்களில் சிறிய தோற்றம் அளித்துள்ளார். தற்போது அவர் சிக்மா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மகள் சாஷா தெறி படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
ஒரு காலத்தில் விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் சங்கீதா தவறாமல் கலந்துகொண்டார். குறிப்பாக நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய கருத்துகள் கவனம் பெற்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொடர்பான எந்த பொதுநிகழ்ச்சியிலும் சங்கீதாவை காண முடியாததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவர் தற்போது குழந்தைகளுடன் லண்டனில் வசிப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கு விஜய் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்தும் வந்தனர்.
இந்த நிலையில், மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிலும் சங்கீதா மற்றும் குழந்தைகள் வராதது மீண்டும் விவாதத்தை கிளப்பியது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனது பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
அந்தணன் கூறுகையில்,
“சங்கீதா நீண்ட காலமாக எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. அதே நேரத்தில், எல்லா நடிகர்களும் அவர்களது குடும்பத்தினரை எல்லா விழாக்களுக்கும் அழைத்து வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது விஜய்யை மட்டும் குறிப்பிட்டு கேள்வி எழுப்புவது புரியவில்லை. இதில் தேவையற்ற குதர்க்கமும் உள்ளது. ஒரு குடும்பத்தை சூட்கேஸ் மாதிரி எங்கும் தூக்கிச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியாது. ஏன் வருவதில்லை என்பதை சங்கீதாவிடமே கேட்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி – விஜய்யின் மனைவியும், மகனும், மகளும் அவருடன்தான் இருக்கிறார்கள். அனைவரும் நீலாங்கரை வீட்டிலேயே வசிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், குடும்ப விவகாரங்களில் தேவையற்ற ஊகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்பதே அந்தணனின் கருத்தாக பார்க்கப்படுகிறது.
English Summary
Why didnot Sangeetha and her children come to the Janyayan music launch event Not necessarily Popularity Open