டி.என்.ஏ சோதனைக்கு வராத ரங்கராஜ்… கோவையில் மகனுடன் இறங்கிய ஜாய் கிரிஸில்டா –என்ன செய்யப்போறாரோ? - Seithipunal
Seithipunal


மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்த ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தை தன்னுடையதுதான் என்பதை டி.என்.ஏ சோதனை மூலம் நிரூபிக்க வேண்டும் என ரங்கராஜ் கோரியிருந்த நிலையில், இதுவரை அவர் அந்த சோதனைக்கு ஆஜராகவில்லை. இந்த சூழலில், ஜாய் கிரிஸில்டாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, பின்னர் திருமணமாகி, கர்ப்பம் வரை சென்றதாக ஜாய் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ஜாய் தனது முதல் கணவரை விவாகரத்து செய்திருந்த நிலையில், ரங்கராஜ் தனது முதல் திருமணத்தை தொடர்ந்ததாகவும் கூறப்பட்டது. தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக ஜாய் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் சட்டரீதியாக தீவிரமடைந்தது.

ஆரம்பத்தில் மௌனம் காத்த ரங்கராஜ், பின்னர் மகளிர் ஆணைய விசாரணைக்கு தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார். அப்போது, தன்னை மிரட்டி திருமணம் செய்துகொள்ள வைத்ததாகவும், பிறந்த குழந்தை தன்னுடையதா என்பதை நிரூபிக்க டி.என்.ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், அந்த கோரிக்கைக்கு பிறகும் அவர் சோதனைக்கு வராதது சர்ச்சையை மேலும் அதிகரித்தது.

இதற்கிடையில், ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் ரங்கராஜ் மீது மேலும் ஒரு புகாரை அளித்தார். அதில், தன்னை ஏமாற்றிய ரங்கராஜ் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், 2026 பிப்ரவரியுடன் தனது வீட்டு ஒப்பந்தம் முடிவடைவதால், இரண்டு குழந்தைகளை கவனிக்க பொருளாதார சிக்கல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரங்கராஜின் சொந்த ஊரான கோயம்புத்தூரில் தனது மகன் ராகா ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “ராகா ரங்கராஜின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜின் ஊரு கோயம்புத்தூரில்” என அவர் குறிப்பிட்டிருந்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எதற்காக கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார் என்பதை அவர் விளக்காத நிலையில், இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், “கோவையில் ஜாய் என்ன செய்யப்போகிறார்?” என்ற கேள்வியை எழுப்பி, இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rangaraj did not come for the DNA test Joy Grisylda landed in Coimbatore with her son what will she do


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->