தமிழகத்தில் 3 ஆவது நாளாக தொடர்ந்த குவாரி உரிமையாளர்கள் போராட்டம்! போக்குவரத்து மாநில தலைவர் பேச்சு வார்த்தை!
tamilnadu 3rd day across quarries strike
தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்படுகிறது. கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கும் அடிப்படை அத்தியாவசியமாக உள்ளது.
இந்நிலையில் குவாரி உரிமையாளர்கள் அனைவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி, 3-வது நாளாக இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்து குவாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.
அதில், ''தற்போது சிறிய மினரல் என கூறப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இதனால் முன்னனதாக தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொடர்ந்து தொழிலை நடத்த முடியாமல் உள்ளது.
சமூக விரோதிகள் சிலர், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவது, கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என முறைகேடுகளான செயல்களை செய்வதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுகிறது. குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'', என உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி, தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டித்துள்ளார்.
மேலும் இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக, அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள், கற்களை ஏற்றி செல்லும் லாரிகள், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வருமனைத்தை முடக்கும் வகையில் உள்ளதாக, செல்ல ராசாமணி கூறினார்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் முறைகேடாக நடைபெறும் கல்குவாரில் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும், அதனால் குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை முடிவுக்கு
கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க வேண்டும் என, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி அறிவித்துள்ளார்.
English Summary
tamilnadu 3rd day across quarries strike