லைக் போட்டது ஒரு குத்தமா? - நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு விராட் கோலி விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரைக்கும் நடைபெற்ற பத்து போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது.

இந்த போட்டியில், 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் 6 அரை சதம் உள்பட 443 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நடிகை அவ்னீத் கவுரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, நடிகையின் கவர்ச்சி படத்திற்கு லைக் போடுவதா! என்று நெட்டிசன்கள் பலரும் விராட் கோலியை இணையத்தில் வறுத்தெடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்திற்கு விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "நான் எனது சமூக ஊடக பதிவுகளை அழித்தபோது, தவறாக லைக் விழுந்திருக்கலாம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதற்கு பின்னால் எந்த நோக்கமும் இல்லை. தேவையற்ற அனுமானங்களை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

கோலியின் விளக்கதிற்கு பின்பு, 'நடிகை போட்டோவுக்கு லைக் போட்டது ஒரு குத்தமா' என நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

virat kholi explain like to actor photo issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->