நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு - தயார் நிலையில் தேர்வு மையங்கள்.!!
tomorrow neet exam in india
இந்தியாவில், மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்ச்சி கட்டாயமாக உள்ளது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதன் படி, 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நாளை பிற்பகல் 2 மணிகுத் தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதவுள்ளனர்.

இந்தத் தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் உள்பட மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
மாணவர்கள், கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் நீட் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 011-40759000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
English Summary
tomorrow neet exam in india