சென்னை: அ.தி.மு.க. பெண் நிர்வாகியிடம் ஆபாசச் சைகை செய்த போலீஸ்! புகார் அளித்தவர் மீதே வழக்கை போட்ட போலீஸ்!
ADMK Member TN Police Chennai Police
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 33 வயது அ.தி.மு.க. பெண் நிர்வாகி, கடந்த 30ம் தேதி நள்ளிரவில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் பயணித்தபோது, பின்வந்து கொண்ட மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர் ஒருவர் தேவையில்லாமல் ஹாரன் அடித்து, அந்த பெண்ணை நோக்கி ஆபாசச் சைகை செய்துள்ளார்.
இதையடுத்து பெண்ணின் கணவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார். அருகிலிருந்த ஓட்டேரி காவல் நிலையத்துக்கு அருகே அவர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், குறித்த நபர் ஓட்டேரி காவல் நிலைய குற்றப்பிரிவைச் சேர்ந்த காவலர் தினேஷ் என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
உயர் அதிகாரி விசாரணைக்குப் பிறகு தினேஷ் ஆயுதப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு எதிராக ஆபாசச் செயலுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது, காவலரின் புகாரின் பேரில், அவரை மோதியதாக பெண்ணின் கணவர் மீது *ஆபாச பேச்சு, தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல்* என மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
ADMK Member TN Police Chennai Police