தமிழ்நாட்டுக்கு அடுத்த அதிர்ச்சி! வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் விலையை அதிகரிக்க முடிவு!
Tamilnadu 25 Toll Gate fee hike
தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
வாகனங்களின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என்றும், இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 67 சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 25 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1 -ந் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வாகனங்களின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயர்த்தப்பட உள்ளது.
புள்ளிவிவரங்கள்:
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 2023- 2024 நிதியாண்டில் மட்டும் ரூ.4,221 கோடி வசூலித்துள்ளது. இது நிதியண்டை விட 10 சதவீதம் அதிகம்.
அதிகபட்சமாக கிருஷ்ணகிரி-தோப்பூர் சுங்கச்சாவடியில் ரூ.269 கோடியும், கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் ரூ.257 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamilnadu 25 Toll Gate fee hike