சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு – 5 நாட்கள் ஆடி மாத பூஜைகள்!
Sabarimala temple opens today 5 days of Aadi month poojas
ஆடி மாத பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்றுமாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஆடி மாத பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (ஜூலை 17, புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்த உள்ளார்.
நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறாது; ஆனால், கருவறை மற்றும் கோவில் சுற்றுப்புறம் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஜூலை 18 முதல் 22 (5 நாட்கள்) வரை, கோவில் நடை தினமும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு கீழ்க்கண்ட பூஜைகள் நடைபெறும்:
நிர்மால்யதரிசனம்,கணபதிஹோமம்,நெய்அபிஷேகம்,உஷபூஜை,உச்சபூஜை,தீபாராதனை,புஷ்பாபிஷேகம்,அத்தாழ பூஜை நடைபெறுகிறது.
ஜூலை 22 அன்று, அத்தாழ பூஜைக்கு பின்னர் “அரிவராசனம்” பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை மூடப்படும்.
பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.அடுத்ததாக, நிறை புத்தரி பூஜை தொடர்பாக கோவில் நடை ஜூலை 29 மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (புதன் கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
English Summary
Sabarimala temple opens today 5 days of Aadi month poojas