தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் விடுதலை – சுருளிமலை இரட்டைக்கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள சுருளிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட திவாகர் என்ற குற்றவாளி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2011-ம் ஆண்டு, சின்னமனூர் அருகே உள்ள சுருளி அருவி பகுதியைச் சேர்ந்த காதலர்கள் எழில்முதல்வன் மற்றும் கஸ்தூரிகொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேனி மாவட்டம் கருநாக்கன்நுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்டவெள்ளை திவாகர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், திவாகரை குற்றவாளி என அறிவித்து 2018-ல் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் உறுதிப்படுத்தியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து திவாகர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவின் தலைமையில் வக்கீல்கள் ஏ. கார்த்தி, மானஸா ராமகிருஷ்ணா, கே.ஸ்ரீபிரியா, திரிஷா சந்திரன், மங்கேஷ் நாயக் ஆகியோர் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

வழக்கில் காவல்துறையின் புலனாய்வு குறைகள், மற்றும் டி.என்.ஏ. மாதிரி சேகரிப்பு குறைபாடுகள் ஆகியவற்றை வாதமாக முன்வைத்தனர்.

தமிழ்நாடு அரசுப் பதிலளிப்பில், அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியம் மற்றும் கூடுதல் தலைமை வக்கீல் வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அம்சங்களை விளக்கி வாதிட்டனர்.

இந்தநிலையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, இருபுற வாதங்களையும் பரிசீலித்து, திவாகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தது.

மேலும் அவர் மீது ஏனைய குற்ற வழக்குகள் இல்லையெனில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதோடு, டி.என்.ஏ. மாதிரி சேகரிப்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The person sentenced to death is released Supreme Courts shocking verdict in the Surulimalai double murder case


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->