₹11 லட்சத்தை இழந்த மின்வாரிய ஊழியர் தற்கொலை..டிஜிட்டல் கைது காரணமா?  - Seithipunal
Seithipunal


₹11 லட்சத்தை இழந்த மின்வாரிய ஊழியர்தற்கொலைக்குக் காரணம் "டிஜிட்டல் கைது " என்றும், மோசடியில் சிக்கியதையே நினைத்து விரக்தியடைந்ததாகவும் கூறி, கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டம் கிழகிரி கிராமத்தைச் சேர்ந்த குமார், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர்.

சமீபத்தில், மர்ம நபர் ஒருவர் குமாரின் செல்போனுக்கு அழைத்து, தன்னை சிபிஐ அதிகாரி விக்ரம் கோஸ்வாமி என அறிமுகப்படுத்தியுள்ளார். குமாரின் மீது பண மோசடி வழக்கு இருப்பதாக கூறிய அவர், "டிஜிட்டல் கைது" செய்யப்பட்டுள்ளீர்கள், வழக்கில் இருந்து விடுபட சில வங்கி கணக்குகளில் பணம் செலுத்த வேண்டும் என மிரட்டியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய குமார், யாரிடமும் ஆலோசிக்காமல் ₹11 லட்சம் வரை அந்த நபர் கூறிய கணக்குகளில் டெப்பாசிட் செய்துள்ளார். அதன் பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு அழைப்பு வந்தது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அவர், கிழகிரி அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்குக் காரணம் "டிஜிட்டல் கைதை" என்றும், மோசடியில் சிக்கியதையே நினைத்து விரக்தியடைந்ததாகவும் கூறி, கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electricity department employee commits suicide after losing ₹11 lakh Is digital arrest the reason?


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->