அரசு பள்ளியில் மதுபோதையில் ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்கள்! அண்ணாமலை கண்டனம்!
BJP Annamalai condemn to DMK Govt
திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் மது பாட்டிலால் ஆசிரியரைத் தாக்கிய சம்பவத்திற்கு பாஜக அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று, திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் மது பாட்டிலால் ஆசிரியரைத் தாக்கி மண்டையை உடைத்திருக்கிறார்கள்.
மற்றொருபுறம், மதுராந்தகம் அருகே புதுப்பட்டு அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, 5 மாணவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
பள்ளிக் கல்வித் துறையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ், ப வடிவில் இருக்கைகள் வைப்போம் என, பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Annamalai condemn to DMK Govt