வீடியோ எடுத்து மிரட்டல்..மாணவியை பலாத்காரம் செய்த 3 பேராசிரியர்கள் கைது!
Take a video and threaten Three professors arrested for sexually assaulting student
கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த 3 பேராசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரியில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்பியல், உயிரியல் துறைகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ஒருவரால் மாணவியொருவர் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றும் நரேந்திரா, மாணவியிடம் "குறிப்பு வழங்குவதாக" கூறி பெங்களூரு மாரத்தஹள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு அறை எடுத்துக்கொண்டு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவிக்கிறது. மேலும், அந்த செயல்களை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இந்த வீடியோவை உயிரியல் பேராசிரியர் சந்தீப் பார்த்து, அதையே பயன்படுத்தி மாணவியை மிரட்டி, அவரும் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் சந்தீப்பின் நண்பர் அனூப் என்பவரும் அதே போன்று மாணவியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவி அந்த வீடியோ மற்றும் மிரட்டலால் பயந்த நிலையில், சம்பவங்களை வெளியில் தெரிவிக்க முடியாமல் தவித்துள்ளார். இதனை தங்களுக்குப் சாதகமாகப் பயன்படுத்திய மூவரும், தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த நிலையில் மாணவி, தனது பெற்றோரிடம் அனைத்து விவரங்களையும் கதறி கூறினார். அதனை அடுத்து, அவர்கள் பெங்களூரு மாரத்தஹள்ளி போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில், நரேந்திரா, சந்தீப் மற்றும் அனூப் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Take a video and threaten Three professors arrested for sexually assaulting student