முதல்-அமைச்சர் வேட்பாளர் அவர்தான்..‘விஜய் கூட்டணி குறித்து பேசிய நடிகை கவுதமி! - Seithipunal
Seithipunal



‘விஜய் கூட்டணிக்கு வந்தாலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்’ என்று  நடிகை கவுதமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். கூட்டணிக்கு கட்சிகளை சேர்ப்பது போன்ற பல்வேறு வேலைகளை அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல் படுத்தி  வருகின்றனர் .அது மட்டும் இல்லாமல் திமுக அதிமுக போன்ற பலம்  வாய்ந்த கட்சிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக ஒரு புறம் 200 தொகுதிகளில் வெற்றி பெற  வேண்டும் என்று தனது பணியை தொடங்கியுள்ளது. அதேபோல அதிமுக பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க தங்களது வேலைகளை தொடங்கியுள்ளனர். 

இந்தநிலையில் சென்னை காசிமேட்டில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகை கவுதமி கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது , “கரூர் துயர சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறோம். அதன் மூலம் உண்மைத் தன்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும்  விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் யார் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பார்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கவுதமி, “ தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கண்டிப்பாக தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சராக வருவார். தமிழ்நாட்டை நல்ல திசையில் கொண்டு செல்வார்” என்றார். இதன் மூலம் த.வெ.க. கூட்டணிக்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He is the Chief Minister candidate Actress Gautami talks about Vijay alliance


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->