CM ஸ்டாலினும், அவரின் மகனும் இந்த சாலையில் செல்வார்களா? மக்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? அறப்போர் இயக்கம் கேள்வி! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வரும், அவரது மகனான துணை முதல்வரும் மற்றும் தமிழக அமைச்சர்களும் தினசரி இந்த சாலையில் பயணம் செய்வார்களா? மாட்டார்கள். பிறகு மக்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? Location - Velappanchavadi to Noombal road, Thiruverkadu Municipality

மேலும், கழிவுநீர் குழாய்களுக்கு ஒரு குழி, மழைநீர் வடிகால்களுக்கு ஒரு குழி, தண்ணீர் குழாய்களுக்கு ஒரு குழி. ஒவ்வொரு குழியையும் தோண்டும் போதும் அங்கே இருக்கும் குடிநீர் பைப், கழிவுநீர் குழாய் மற்றும் மின்சார வயர்கள் என அனைத்தையும் உடைத்து எறிந்து விடுவார்கள். இப்படி சாலையில் கபடி விளையாடிவிட்டு தோண்டிய குழிகளை அப்படியே விட்டுவிட்டு கிளம்பி போய் விடுவார்கள். இந்த தனியார் ஒப்பந்ததாரர்களை கண்காணிக்க வேண்டிய அரசு ஊழியர்கள் அந்த ஒப்பந்ததாரர்களின் அரசியல் பின்னணி காரணமாக அவர்களுக்கு முன்பாக அடங்கி ஒடுங்கி நிற்பார்கள். 

தொடர்ச்சியாக பல வருடங்களாக இது தான் தமிழக அரசின் நிர்வாக ஒழுங்கீனம். அரசியல் பின்னணி கொண்ட ஒப்பந்ததாரர்களை வாழ வைக்க மக்களை பாடாய் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதன் விளைவு தான் இன்று தமிழகம் முழுவதும் நொறுங்கி கிடக்கும் சாலைகள். அதுவும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் நிலை மிக மிக மோசம்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arapor iyakkam condemn to DMK MK Stalin govt road issue


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->