இரு குழந்தைகளுடன் வாழ ஆசைப்பட்ட கள்ளக்காதலி... இரட்டை கொலையில் முடிந்த கள்ளக்காதல்!
Delhi illegal affair crime murder
டெல்லியில் நடந்த கள்ளக்காதல் சம்பவம் இரட்டை கொலையாக முடிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய டெல்லியில் வசிக்கும் ஆகாஷ் (23) என்பவரின் மனைவி ஷாலினி (22) வீட்டிலேயே இருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் ஷாலினிக்கு ஆஷு எனும் 34 வயது சைலேந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டது. அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. ஆஷு ஒரு குற்றப்பின்னணி கொண்ட நபர் என போலீசார் தெரிவித்தனர். இந்த உறவில் ஷாலினி கர்ப்பமாகியிருந்தார்.
வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தந்தை என பெருமைப்பட்ட ஆஷுவின் கனவு உடனே சிதைந்தது. காரணம், ஷாலினி தனது கணவன் ஆகாஷுடன் சமரசம் செய்து, குழந்தைகளுடன் மீண்டும் குடும்ப வாழ்க்கை தொடர முடிவு செய்திருந்தார். இதனால் ஆஷு கோபமடைந்து, இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்றிரவு ஷாலினியும், ஆகாஷும் ரிக்ஷாவில் தாயாரை பார்க்கப் புறப்பட்டனர். அப்போது ஆஷு திடீரென கத்தியுடன் தாக்கினார். ஆகாஷை குத்த முயன்றும் அவர் தப்பித்தார். பின்னர் ஆஷு, ஷாலினியை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தியதில் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மனைவியை காப்பாற்ற முயன்ற ஆகாஷ், கத்தியை பறித்து ஆஷுவை எதிர்த்து தாக்கினார்.
மூவரும் கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், ஷாலினி மற்றும் ஆஷு இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். ஆகாஷ் தற்போது காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் காதல், துரோகம், கோபம் என அனைத்தையும் ஒரே துயரமான முடிவில் முடித்துவிட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்
English Summary
Delhi illegal affair crime murder