லூவர் அருங்காட்சியகத்தில் பெரும் பரபரப்பு! - பாரிசை அதிரவைத்த நெப்போலியனின் வைர நகை கொள்ளை...!
Huge stir at the Louvre Museum theft of Napoleons diamond jewels shocked Paris
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மன்னனும் உலக வரலாற்றில் அதிரடியான போர்தந்திர நிபுணராகவும் பெயர் பெற்றவர் நெப்போலியன். பல்வேறு நாடுகளை வென்று தனது ஆட்சிக்கொடியை நாட்டிய அவர், தனது கைவசம் வைத்திருந்த அரிய வைர நகைகள் உலகப் புகழ்பெற்ற பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்பட்டன.

அந்த நெப்போலியன் பயன்படுத்திய ஒன்பது அரிய வைர நகைகள், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள புகழ்பெற்ற லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள், இந்த அரிய நகைகளையும் கலைப் பொருட்களையும் பார்வையிட வந்து செல்கின்றனர்.
ஆனால், இன்று அந்த அருங்காட்சியகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்தது. வழக்கம்போல அருங்காட்சியகத்துக்குள் நுழைந்திருந்த சுற்றுலாப் பயணிகளுடன் கலந்துகொண்ட மர்ம நபர்கள், திடீரென நெப்போலியனின் ஒன்பது வைர நகைகளையும் சாமர்த்தியமாக திருடிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக விரைந்து வந்து, அருங்காட்சியகத்தை சுற்றிவளைத்தனர். பாதுகாப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
Huge stir at the Louvre Museum theft of Napoleons diamond jewels shocked Paris