ஆவினுக்கு பால் வினியோகத்தை நிறுத்தி போராட்டம் - விவசாய சங்கம் அறிவிப்பு!
Protest over stopping milk supply to Avin Farmers Association announces
கொள்முதல் விலையை உயர்த்த கோரி வரும் 22-ந் தேதி ஆவினுக்கு பால் வினியோகத்தை நிறுத்தி போராட்டம் செய்யப்போவதாக விவசாய சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாமக்கல்லில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
“தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் கொள்முதல் செய்யும் பசும்பால், எருமைப்பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போதைய விலையில் இருந்து ரூ.15 உயர்த்த வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனால் அரசு கொள்முதல் விலையை உயர்த்தவில்லை.
எனவே இதை கண்டித்து வருகிற 22-ந் தேதி ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் வினியோகத்தை நிறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார் .மேலும் நாங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த போராடி வரும் சூழ்நிலையில் ஆவின் மூலம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.210 மதிப்பீட்டில் 250 கிராம் பால்கோவாவை நிர்பந்தத்தின் அடிப்படையில் வசூலிப்பதை கண்டிக்கின்றோம் என்றும் இவ்வாறு அவர் கூறினார்.ஆவினுக்கு பால் வினியோகத்தை நிறுத்தி போராட்டம் விவசாயிகள் அறிவித்துள்ளதால் ஆவினுக்கான பால் விநியோகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
English Summary
Protest over stopping milk supply to Avin Farmers Association announces