தீபாவளியை முன்னிட்டு கூடுதல் கட்டணம்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்; ஆர்டிஓ அதிரடி...!
Omni buses fined for charging extra fare on the eve of Diwali
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்துள்ளனர். அதன்படி, தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்காரணமாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்படும் எனத் தகவல் வெளியானது. எனினும், ஒருசில ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நேற்று மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படையினர், நேற்று முழுவதும் தென்சென்னை பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 108 ஆம்னி பேருந்துகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதில், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது, கூடுதல் பாரம் ஏற்றப்பட்டது, புகை பரிசோதனை சான்றிதழ் இல்லாதது உள்பட பல்வேறு விதிமுறைகளை மீறிய 52 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை அளித்துள்ளனர். அதன்படி, குறித்த பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
English Summary
Omni buses fined for charging extra fare on the eve of Diwali