நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! கூடவே ஒரு முக்கிய கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு!
DMK District Secretary meet MK Stalin
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காணொலிக் காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும்.
அதுபோது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இந்த கூட்டம் நடைபெறும் எனவும் அந்த அறிக்கையில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK District Secretary meet MK Stalin