இனி பெண்கள் இரவில் தனியாக செல்ல பயம் வேண்டாம்.. காவல்துறையின் சூப்பர் திட்டம்..!! - Seithipunal
Seithipunal


 "பெண்கள் பாதுகாப்பு திட்டம்" என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பெண்கள் 1091, 112 ஆகிய எண்களுக்கு அழைத்தால் ரோந்து வாகனம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும். இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "பெண்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டம் ஒன்றை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 044 -23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்க்கு அழைக்கலாம்காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அனைத்து நாள்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும்" என தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Police Introduces Women Protection Scheme


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->