விடை கொடு சுஜித்.. உன்னை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்க.. எங்களை ஏமாற்றி சென்றாயே..!! - Seithipunal
Seithipunal


திருச்சி மணப்பாறையில் இரண்டு வயது சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மூன்று நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த 60 மணி நேரமாக தற்போது வரை மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 5.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்துள்ளார். இதையயடுத்து தமிழக காவல்துறை, தீயணைப்புத் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகளும் சார்ந்தவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

sujith, surjith, surjith family,

இந்தநிலையில், நேற்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு ஆள் உள்ளே இறங்கும் அளவிற்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகின்றது. ஆனால், கடினமான பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவதில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

ஆழ்துளை கிணற்றில் தற்போது 88 அடியில் உள்ள குழந்தை சுஜித்தை தொடர்ந்து நவீன கேமரா மூலமாக மீட்பு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

ஆழ்துளை கிணற்றின் அருகே ரிக் இயந்திரம் மூலமாக தபோது வரை 65 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் 98 அடி வரை குழி தோண்ட முடிவு செய்துள்ளனர். பலவிதமான முயற்சிகள் மற்றும் பல்வேறு திட்டங்களுடன் சிறுவனை எப்படியாவது நலமுடன் மீட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்த்து தமிழகமே காத்திருந்தது. 

sujith, surjith, surjith family,

இந்த நிலையில்., சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து., சிறுவனின் உடலை மீட்ட மீட்பு படையினர் அங்குள்ள ஆவாரம்பட்டிபுதூர் பகுதியில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த துயரமானது தமிழக மக்களிடம் மட்டுமல்லாது இந்திய மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒரு படமாக எடுத்து., இனி வரும் காலங்களில் இது போன்ற துயரங்கள் நடக்காமல் அரசாங்கம் மட்டுமல்லாது அனைவரும் விழிப்புணர்வுடனும்., எச்சரிக்கையுடனும்., தன்னார்வத்தோடு செயல்பட வேண்டும்... 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

surjith died after long time in bore well


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->